பிரேசில் நாட்டில், சீன நிறுவனம் கட்டியுள்ள மராங்கடு சூரிய ஒளி மின் நிலையம் ஜுன் 7ஆம் நாள் மின்சார உற்பத்தியைத் தொடங்கியது. இத்திட்டத்தின் மின் உற்பத்தித்திறன், 446 கிலோவாட்டை எட்டுவதோடு, இதனால் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு மின் விநியோகம் வழங்க முடியும்.
இந்த மின் நிலையம் முழுமையாக இயங்கும் சூழலில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9 லட்சம் டன் அளவிலான கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும். இது, உள்ளூர் குடியிருப்புகளுக்கு பொருளாதார மற்றும் சுற்றுசூழல் ரீதியில் பெரும் நலன்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மராங்கடு சூரிய ஒளி மின் நிலையம், பிரேசிலிலுள்ள எஸ்.பி. ஐ. சி. நிறுவனம் முதலீடு செய்து, அதன் தலைமையில் கட்டியமைக்கப்பட்டது.