ஈரானில் உள்ள பொதுமக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவுறுத்தல் செவ்வாயன்று X தளத்தில் உள்ள அதன் பாரசீக மொழி கணக்கில் வெளியிடப்பட்டது.
“உங்கள் பாதுகாப்பிற்காக, இந்த நொடியிலிருந்து ஈரான் நேரப்படி இரவு 9 மணி வரை, ஈரான் முழுவதும் ரயிலைப் பயன்படுத்துவதையும் அதில் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”, “ரயில்களிலும் ரயில் பாதைகளுக்கு அருகிலும் நீங்கள் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
‘அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம்’: ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
