புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வியாட்நாம் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

வியாட்நாம் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சூலினுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சீனாவும் வியாட்நாமும், நெடுநோக்கு தன்மை வாய்ந்த பொது எதிர்கால சமூகமாகும். கடந்த சில ஆண்டுகளில் இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் தலைவர்களின் கூட்டு வழிகாட்டலில், இரு நாட்டுறவு பாய்ச்சல் வளர்ச்சியடைந்தது. நெடுநோக்கு ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளன. இவை இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்துள்ளன. இவ்வாண்டில், இரு நாட்டு உயர் நிலை தொடர்பு மேற்கொள்ளப்படுகின்றது. ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் பன்முக ஒத்துழைப்புகள் முன்னேறி வருகின்றன. சீன-வியாட்நாம் உறவில் நான் உயர்வாக கவனம் செலுத்துகிறேன். சூலினுடன் இணைந்து, சீன-வியாட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்குத் தலைமை தாங்கி, இரு நாட்டு மக்களுக்கு நலன் தந்து, பிரதேச மற்றும் உலகிற்கு நிலைப்புத்தன்மையையும் உந்து ஆற்றலையும் அளிக்க விரும்புகிறேன் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author