திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் ஓபன் சேலஞ்ச்..!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வரும் பட்சத்தில் தவெக அனைத்து 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்பதால், தற்போதைய தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகாலம் நீடிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் சாமியை வேண்ட வேண்டும் என்று தவெக அமைச்சர் அருண்ராஜ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தவெகவின் பலம் குறித்து திமுக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், தவெகவின் சமூகநீதிக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு மட்டுமே பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியில் இணைந்துள்ளன என்றும் மிக உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

தவெக அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு, திமுக தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ரீதியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியுள்ள இந்த அனல் பறக்கும் கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author