80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, புதுபிக்கவல்ல எரியாற்றல் வளர்ச்சி ஆகியவற்றை தனது பெய்ஜிங் பயணத்தில் கண்டறிந்தார். உலகளாவிய நிலையிலும் இவை வெற்றிகரமான மாதிரிகளாகும் என்று பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காத்து பலதரப்புவாதத்தை ஆதரிப்பதில் சீனாவின் பங்களிப்பு குறித்து பேர்பாக் கூறுகையில், ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா ஒன்றாகும். அதோடு, பலதரப்புவாதத்துக்கான உறுதியான ஆதரவளிப்பாளர்களில் சீனா ஒன்றாகும். அமைதியைப் பேணிக்காப்பதில் சீனா எப்போதும் உறுதியாக வாக்குறுதியளித்துள்ளது. ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியதோடு, மக்களை இந்நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்துள்ளது. ஐ.நா சாசனத்தின் உறுதியான நடைமுறையாக்கம் இதுவாகும். தொடரவல்ல வளர்ச்சி இலக்குக்கான உறுதியான ஆதரவுமாகும். இந்த முன்னேற்றப் போக்கில் சீனா வழிகாட்டல் பங்களிப்பை ஆற்றி வருகிறது என்று அவர் கூறினார்.
