சீன-வடகொரிய நட்புறவு ஒத்துழைப்பு உதவி அளிக்கும் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கும், வடகொரிய உழைப்பாளர் கட்சி பொது செயலாளரும் அரசு கவுன்சிலின் தலைவருமான கிம் ஜாங்உனும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்திகளை அனுப்பினர்.
இதில் ஷி ச்சின்பிங் குறிப்பிடுகையில்,
1961ஆம் ஆண்டில் இரு நாடுகளின் முன்தைய தலைமுறை தலைவர்கள், இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இரு நாட்டு மக்கள் போரில் எதிரியை கூட்டாக எதிர்த்து ரத்தம் சிந்தி, உருவாக்கிய நட்புறவுக்கு அரசியல் மற்றும் சட்ட அடிப்படையை இது உருவாக்கியது.
நூற்றாண்டுகளில் கண்டிராத சர்வதேச நிலைமையைச் சந்திக்கும் போது, கிம் ஜாங்உனுடன் இணைந்து, நெடுநோக்கு தொடர்பை அதிகரித்து, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு வழிகாட்டி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்து, பிரதேச அமைதியை முன்னேற்ற பாடுபட விரும்புகிறேன் என்றார்.
