பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! ஏப்ரல் 17 முதல் ஜாலியோ ஜாலி  

Estimated read time 1 min read

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கோடைக்கால வெப்பம் மற்றும் தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
தற்போது மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் தேர்வுகளும் நிறைவடைகின்றன.
வழக்கமாக மே மாதம் தொடங்கும் விடுமுறை, இந்த ஆண்டு சற்று முன்னதாகவே ஏப்ரல் மாதத்தின் பாதியிலேயே தொடங்குகிறது.

You May Also Like

More From Author