ஓணம் சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்..!!

Estimated read time 1 min read

ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 25 வரை கொண்டாடப்பட உள்ளது.

மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் இடையே ஜூலை 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கத்தில் ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8:40 மணிக்கு மங்களூரு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் தலா 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

You May Also Like

More From Author