ஃபுஜியன் மாநிலத்தின் ஜுவன்ஜோ நகரிலுள்ள காலணி தயாரிப்பு ஆலை ஒன்றில் ஜூலை 9ஆம் நாள் ஏற்பட்ட தீ விபத்து கடும் உயிரிழப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் பிறப்பித்த முக்கிய உத்தரவில், பணியாளர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு பணியையும், விபத்துக்குப் பிந்தைய நிவாரண மற்றும் ஆறுதல் பணியையும் முழு முயற்சியுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், விபத்துக்கான காரணத்தை வெகுவிரைவில் விசாரித்து, பொறுப்பேற்க வேண்டிய தரப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், பல்வேறு இடங்களிலுள்ள தொடர்புடைய வாரியங்கள் விபத்திலிருந்து படிப்பினையைப் பெற்று, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை செவ்வனே ஒருங்கிணைத்து, கடும் விபத்து ஏற்படுவதைத் தவிர்த்து, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஃபுஜியனில் காலணி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஷிச்சின்பிங் உத்தரவு
You May Also Like
More From Author
கப்பல் கட்டுமான ஆலையில் ஒரு சரக்கு கப்பலில் தீ விபத்து
September 10, 2026
மக்கௌ தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கலை நிகழ்ச்சி
December 20, 2024
