நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி சொல்வேன் – திருமா

Estimated read time 0 min read

திமுக தலைவர் ஸ்டாலினுடன் நட்பு தொடரும் என்கிற கருத்தை கூறிய திருமாவளவனுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த நிலையில், வைகோவின் பரிந்துரைக்கு திருமாவளவன் நன்றி என பதிலளித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பார்வை. அப்படி ஒன்றாக இருந்தால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை வலுவாக எதிர்க்க முடியும். இதை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது. நோபல் பரிசு கிடைத்தால் வைகோவிற்கு நன்றி சொல்வேன். வைகோவின் பரிந்துரைக்கு நன்றி” என்றார்.

You May Also Like

More From Author