வேதியியல் ஆயுதத் தடை அமைப்பின் பிரதிநிதிக் குழுவின் சீனப் பயணம்

வேதியியல் ஆயுதத் தடை அமைப்பின் பிரதிநிதிக் குழு ஆக்ஸ்ட் 31ஆம் நாள் முதல் செப்டெம்பர் 5ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தில் இக்குழு ஜிலின் மாநிலத்தின் ஹுன்சுன், துன்ஹுவா, கிர்பாலின் ஆகிய இடங்களுக்குச் சென்று 2ஆவது உலகப் போர் காலத்தில் ஜப்பானின் படை சீனாவை ஆக்கிரமித்த போது விட்டுச் சென்ற வேதியியல் ஆயுதங்களைத் தோண்டியெடுத்து ஒழிப்பதைப் பார்வையிட்டது.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 7ஆம் நாள் கூறுகையில், ஜப்பன் தங்களது பொறுப்பை உண்மையாக ஏற்று சீனாவில் விட்டுச்சென்ற வேதியியல் ஆயுதங்களை அனைத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று சீனா உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author