சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சாதனை அளவில் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக 12 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 60 நாட்களே உள்ள நிலையில், கோப்பைக்கான பயணத்தை இன்று (ஏப்ரல் 13) ஐசிசி முறைப்படி தொடங்கியது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுமார் ₹74 கோடியுடன் (7.9 மில்லியன் டாலர்) ஒப்பிடும்போது, இந்த முறை 10% உயர்வுடன் சுமார் ₹81.83 கோடி (8.7 மில்லியன் டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: பரிசுத்தொகை வரலாறு காணாத உயர்வு!
