இமயமலை பனி பேரழிவை ஆராய நேபாளத்துக்குச் சென்றது சீன அறிவியலாளர்கள்

Estimated read time 1 min read

சீனாவின் ஆய்வுக் குழு ஒன்று அக்டோபர் 4ஆம் நாள் செங்துவிலிருந்து புறப்பட்டு நேபாளத்துக்குச் சென்று, உறைநீர்மண்டலம் மற்றும் புவியின் மேலடுப் பகுதிகளை கூட்டு ஆய்வு செய்ய உள்ளது. இக்குழுவில், பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் நாள் நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு, எல்லை கடந்து, சீனாவின் சிட்சாங் பிரதேசத்தின் கிரோங் நுழைவாயில் வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஹோமிங்சாய் கூறுகையில், இமயமலை பனிப் பேரழிவு குறித்த பன்முக ஆய்வுகளை, ஒரு தனி நாடு மேற்கொள்ள முடியாது. சீன-நேபாள கூட்டு ஆய்வு ஓர் அரிய நடைமுறையாகும். இதில் மூன்று பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். முதலாவதாக, பேரிடர் மூலப் பகுதியிலிருந்து பள்ளத்தாக்கிற்குச் செல்லும் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, முழு நீர்ப்பிடிப்புப் பகுதியின் வண்டல் தடிமன் பரவலைக் கணக்கிட வேண்டும். மூன்றாவதாக, கிரோங் நுழைவாயிலின் சீரமைப்புக்கும் கீழ்ப்பகுதியின் தடுப்புக்கு நேரடித் தரவுகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.

You May Also Like

More From Author