சீனாவின் நான்ஷா தீவுகளின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக வந்த பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடை செய்யும் விதமாக, சீனக் கடல் காவற்துறையைச் சேர்ந்த கப்பல் உரிய நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், சீனாவின் நடவடிக்கையின் மீது அமெரிக்கா பழி தூற்றியது. அமெரிக்கா சீனா மீது அவதூறு செய்தது.
ரெனாய் பாறை, சீனாவின் நான்ஷா தீவுகளுக்குச் சொந்தமானது. பிலிப்பைன்ஸின் செயல் சர்வதேச சட்டத்தையும், சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்குமிடையே கையெழுத்தான தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையையும் மீறியுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்திய உத்தி திட்டத்தை முன்னேற்றி, சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்வதில் பிலிப்பைன்ஸை ஈடுபடச் செய்ய அமெரிக்கா துரிதப்படுத்தி வரும் பின்னணியில் தான், சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ரெனாய் பாறை சர்ச்சை ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் இப்பிராந்தியத்தில் நிலவியல் ரீதியான முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. அதற்கும் சீனாவின் தைவானுக்கு இடையே மிக குறைவான நேர்கோடு தூரம் தொலைவு சுமார் 200 கிலோமீட்டர் மட்டுமே உள்ளது.
பிலிப்பைன்ஸ் அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பயன்படுத்தி, அந்நாடு தன்னைச் சார்ந்திருப்பதை வலுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகின்றது. சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே மோதலை எழுப்புவதன் மூலம், பலன் பெற அமெரிக்கா விரும்புகின்றது.
தென் சீனக் கடல் பிரச்சினையானது, அமெரிக்கா சீனாவைத் தடை செய்வதற்கான ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது.