இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகவுள்ள கொரோனா குமார் படம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
தற்போது இப்படத்தின் பெயர், ‘வைப் குமார்’ என மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு, நடிகர் சிலம்பரசன் உடன் தொடங்கப்பட்ட திரைப்படம் ‘கொரோனா குமார்’.
ஆனால், இடையில் படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கும், சிம்புவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டார்.
தொடர்ந்து இந்த படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ‘வைப் குமார்’-இன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விஷ்ணு விஷால், ‘ராட்சசன்-2’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், அதன்பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். அதோடு இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கவுள்ளார்.