ஐ.நாவின் சீன மொழித் தினத்துக்கான சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நியூயார்கில் துவக்கம்

Estimated read time 0 min read

ஐ.நாவின் 17ஆவது சீன மொழித் தினத்துக்கான சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 13ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழு, சீன ஊடகக் குழுமத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன்ஹாய்சிவுங் இதில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

ஐ.நாவின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சீன மொழி திகழ்கிறது. ஐ.நாவின் வளர்ச்சியும், சீனா மற்றும் ஐ.நாவின் ஒத்துழைப்பும் சீன மொழியில் உண்மைக்கேற்ப பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபுஸுங் தெரிவித்தார்.

ஷேன்ஹாய்சிவுங் கூறுகையில், ஐ.நாவிலுள்ள சட்டப்பூர்வ இடத்தைச் சீனா மீண்டும் பெற்ற 55ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டாகும். நியூயார்க் மற்றும் ஜெனீவா ஆகிய இரண்டு இடங்களில் சீன மொழித் தினத்துக்கான நிகழ்ச்சிகளை நாங்கள் முதன்முறையாக நடத்தினோம். பன்னாட்டு நண்பர்களுடன் இணைந்து உலக ஒற்றுமையுடன் இன்னல்களைக் கூட்டாகச் சமாளிப்பதென்ற விவேகம் மற்றும் சக்தியைப் பெற விரும்புகிறோம் என்றார்.

இதுவரை அமெரிக்க அசோசியேட்டட் பிரெஸ், என்.பி.சி. உள்ளிட்ட அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட உலகின் 48நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1127 முக்கிய செய்தி ஊடகங்கள், இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author