அக்டோபரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2024ம் ஆண்டு கூட்டத்தின் போது, சீன-அமெரிக்க நிதித் துறை பணிக்குழு, அமெரிக்க வாஷிங்டனில் 6ஆவது கூட்டத்தை நடத்தியது. சீன மக்கள் வங்கி துணைத் தலைவர் ஷுவேன் ச்சாங் நன், அமெரிக்க நிதி அமைச்சகத்தின் துணையாளர் அமைச்சர் பிரேன் நேய்மன் ஆகியோர், இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் நிதி நிலைமை, நாணய நிதி் கொள்கைகள், நிதி நிதானம் மற்றும் கண்காணிப்பு, மூலதனச் சந்தை முதலிய கருப்பொருட்கள் குறித்து, இரு தரப்பினர்களும் சிறப்பான, நடைமுறைக்கு ஏற்ற, மனம் திறந்த மற்றும் ஆக்கப்பூர்வ முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து, சீனா, அமெரிக்கத் தரப்பிடம் தனது கவனத்தைத் தெரிவித்தது.
படம்:VCG