அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு ரத்து, 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகி உள்ளதாக கூறிய நீதிபதி, வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகி உள்ளதாக கூறிய நீதிபதி, வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை டிசம்பர் 21 காலை 10:30க்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார். அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராகவும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.