சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

அறிக்கையில், இந்த நிதியாண்டுக்கான 82 முக்கிய அறிவிப்புகளையும் அவர் அறிவித்தார்.

அவற்றில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கும், ஒரு ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு
255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.7.46 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 419 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு, ஐடி கார்டு வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு

You May Also Like

More From Author