சீனாவின் வாய்ப்பின் மூலம் நமக்கான வாய்ப்பைப் படைக்க வேண்டும்:ஃபோக்ஸ்வேகன் அதிகாரி

Estimated read time 1 min read

6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி 18ஆம் நாள் ஹாய்நான் மாநகரில் நிறைவடைந்தது. 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3400க்கும் அதிகமான வணிக சின்னங்கள் இதில் ஒன்றுக்கூட்டி காட்டப்பட்டுள்ளன. 277 புதிய உற்பத்திப் பொருட்கள் அங்கு நடைபெற்ற 44 முதலாவது வெளியீட்டு விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சீனாவுக்கான துணை தலைமை இயக்குநர் சுபாஹூங் கூறுகையில், உயர் தர வளர்ச்சி என்பது சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். 2ஆவது அறிவியல் தொழில்நுட்பங்களைப் பொருளாதாரத்துக்கான புதிய உந்து ஆற்றலாக மாற்றுவதாகும். ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இவற்றுக்குப் பெரும் முக்கியத்தும் அளித்து அவற்றில் பங்கேற்கவும் முயற்சி செய்யும். சீனாவின் வாய்ப்புகளின் மூலம், நமக்கான புதிய வாய்ப்புகளைப் படைப்பதோடு, தொழிலின் புரட்சியிலும் கலந்து கொள்ள விரும்புகிறோம் என்றார்.

 

You May Also Like

More From Author