மா யிங்ஜூயு தலைமையில் தைவான் இளைஞர்கள் குழு சீனப் பெருநிலப்பகுதியில் பயணம்

திரு மா யிங்ஜூயு தலைமையிலான சீனத் தைவான் இளைஞர்கள் ஏப்ரல் முதல் நாள் தொடங்கி 11ஆம் நாள் வரை குவாங்டொங், ஷேன்சி, பெய்ஜிங் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து தங்கள் மூதாதையரின் தடயங்களைத் தேடிப் பரிமாற்றம் நடத்தவுள்ளதாகச் சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென் பின்ஹூவா 25ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தைவான் இளைஞர்கள் குழுவின் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டை இரு கரை சகநாட்டவர்கள் கூட்டாகப் பரப்புரை செய்ய வேண்டும் என்றும், இரு கரை இளைஞர்களிடையில் உள்ள பல்வேறு துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை அதிகரித்து இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் விரும்புவதாக ஜென் பின்ஹூவா கூறினார்.

You May Also Like

More From Author