அமெரிக்க இணைய பயனாளர்களிடையே “ரெட் நோட்” எனும் சீன செயலி வைரலாகியுள்ளது.
வட அமெரிக்காவின் ஆப்பிள் செயலி கடையின் இலவச செயலிகளின் பதிவிறக்கப் பட்டியலில், சீனாவின் இந்த சமூகச் செயலி முதலிடத்தை பிடித்துள்ளது. 19-ஆம் தேதிக்கு பின்னர் டிக் டாக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செயலியை பயன்படுத்தும் அமெரிக்காவின் இணையப் பயனாளிகள் ரெட் நோட் செயலியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
டிக் டார் அகதி என அவர்கள் தங்களை அழைத்து கொண்டனர். டிக் டாக் தேசியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக உள்ளது என அமெரிக்க அரசு பரப்புரை செய்வதை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது. ரெட் நோட் செயலி பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கான நல்ல தளமாக உள்ளது என அவர்களில் சிலர் பதிவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சீனா மீது அடக்கு முறை மேற்கொள்ளும் அமெரிக்காவின் அரசியல் போக்கு இரு நாட்டு மக்களின் பரிமாற்றத்தைப் பாதித்துள்ளது. வெளிநாட்டுத் திறமைசாலிகளை அமெரிக்கா உட்படுத்துவதென்ற புகழும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் சாதகமும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், இரு நாட்டு மக்களுக்கிடையே உள்ள அன்பு பரிமாற்றம் தான் சீன-அமெரிக்க உறவு தாழ்ந்த நிலையிலிருந்து சரியான பாதைக்குத் திரும்புவதற்கு துணை புரிந்துள்ளது. சீன-அமெரிக்க உறவின் கதவு மக்களால் திறக்கப்பட்டுள்ளது. திறந்தால், மூடப்படாது என்று இரு நாட்டு மக்களும் தங்கள் செயலின் மூலம் நிரூபித்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிய அரசு விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் இரு நாட்டு மக்களின் பரிமாற்றம் மற்றும் நட்புறவுக்கான விருப்பத்தை அறிந்து சீனாவுடன் இணைந்து இரு நாட்டு உறவை நிலையான பாதையில் அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.