2025ஆம் ஆண்டில், சீனாவுக்கும் நாடுகளுடன் இணைந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகள் வேகமாக விரிவாக்கியுள்ளது. வர்த்தக ஒத்துழைப்பு, இரு வழி முதலீடு, திட்டப்பணியின் கட்டுமானம் உள்ளிட்டவற்றில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் பெற்றுள்ளன என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில், சீனாவுக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான சரக்கு வர்த்தகத் தொகை 23 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் ஆகும். இது, ஒட்டுமொத்த வர்த்தக பங்கில் 51.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தொடர்புடைய நாடுகள் மீதான நாணயமற்ற நேரடியான முதலீட்டுத் தொகை 28 ஆயிரத்து 336 கோடி யுவானுடன், 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில், சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை பயணங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெக்ஸ்தான், ஹங்கேரி-செர்பியா ரயில்வே போன்ற திட்டப்பணிகள் முக்கியமான முன்னேற்றங்கள் அடைந்துள்ளன.
