முடிந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்  

Estimated read time 1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில், “அலப்பறை கிளப்புறோம், தலைவரு நிரந்தரம்! ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்தது” என்று பதிவிட்டுள்ளது.
அத்துடன் படக்குழுவினர் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக, ஏப்ரல் 4-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author