நாளை தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை!  

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களும் நாளை மூடப்படும்.
கோவையின் கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் முக்கிய சுற்றுலாத் தலங்களும் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்களைத் தடுக்க வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் யானைப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

Please follow and like us:

You May Also Like

More From Author