ஈரானுடன் போரில் அமெரிக்காவின் 50% ஏவுகணைகள் காலி  

Estimated read time 1 min read

ஈரானுடனான ஏழு வார காலப் போரில் அமெரிக்க ராணுவம் தனது மிக முக்கியமான ஏவுகணைகளின் இருப்பில் பாதியைப் பயன்படுத்தியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அதிரடித் தகவல் அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் குறித்த பெரும் விவாதத்தை உலகரங்கில் கிளப்பியுள்ளதுடன், வரும் ஆண்டுகளில் மற்றொரு பெரிய போர் மூண்டால் அமெரிக்கா அதைச் சமாளிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
தற்போதைய சூழலில், ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்தம் ஒருவேளை முறிந்தால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் அமெரிக்காவிடம் போதிய அளவில் உள்ளன.
ஆனால், இதையும் தாண்டி சீனா போன்ற ஒரு நாட்டிடம் போர் மூண்டால், அதைச் சமாளிக்கத் தேவையான ஆயுத பலம் அமெரிக்காவிடம் தற்போது இல்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

You May Also Like

More From Author