எரியாற்றல் நெருக்கடியில் சீனா வெற்றியாளர்:ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஊடகங்கள்

Estimated read time 0 min read

ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால், உலகளவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டிராத மிகக் கடுமையான எரியாற்றல் நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சீனா வெற்றிகரமாகச் சமாளித்து மிகப் பெரிய வெற்றியாளராக உருவெடுத்துள்ளதாக ஜெர்மனி மற்றும் பிரிடன் ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் தி மிரர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இத்தகைய நெருக்கடிக்கு பெய்ஜிங் தயாராக உள்ளது. சில மாதக் கால முற்றுகையைச் சமாளிக்கக் கூடிய பெட்ரோல் மற்றும் இயற்கை வாயுவை சீனா சேமித்துள்ளதோடு, உலகின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் சாதனங்களின் உற்பத்தியில் முதன்மை பங்கு வகிக்கிறது. ஆற்றல் சேமிப்பு மின்கலன், மின்சார வாகனம் முதலிய துறைகளின் உலகச் சந்தையில் சீனாவானது 70 விழுக்காடு முதல் 85 விழுக்காடு பங்கினை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஃபைனன்ஷியல் டைம்ஸ் நாளேட்டில், சீனா தொலைநோக்கு தன்மையுடன், எரியாற்றல் கொள்கையைச் சரிப்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author