சீன மக்கள் குடியரசின் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 2025ம் ஆண்டு ஜனவரி 14ம் நாள் முதல் 17ம் நாள்வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இரு நாட்டுக் கூட்டறிக்கை 16ம் நாள் வெளியிப்பட்டது.
சீன-இலங்கை தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 68 ஆண்டுகளில், இரு தரப்பும், ஒன்றுக்கொன்று மதிப்பளித்து உதவி செய்து, சமமாகப் பழகி வருகிறது. பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையில் நட்பாகப் பழகி, ஒன்றுக்கொன்று நலன் தந்து ஒத்துழைப்பதற்கான முன்மாதிரியாக இது திகழ்கின்றது.
உயர்நிலையில் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, தத்தமது மைய நலன்கள் மற்றும் அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவுளிப்பதை இரு தரப்பினரும் மீணடும் வலியுறுத்தினர்.
இரு நாட்டுத் தலைவர்களின் கூட்டு வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு ஒத்துழைப்பில் சீனாவும் இலங்கையும் அதிக சாதனைகளைப் படைத்துள்ளன. இரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் சாதனைகள் குறித்து, இரு தரப்பினரும் மனநிறைவைத் தெரிவித்தனர்.