யிவூ வளர்ச்சி அனுபவத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்:ஷி ச்சின்பிங்

யிவூ சந்தை உலகளவில் புகழ்பெற்ற சந்தையாக வளர்வதில் தனிச்சிறப்பான வளர்ச்சி அனுபவத்தைப் பெற்றுள்ளது.

இது ஓரிடமானது தன் நிலைமைக்கு ஏற்ப மாவட்டப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதில் பெற்றுள்ள வெற்றிகரமான அனுபவமாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் தெரிவித்துள்ளார்.

நல்ல நிர்வாகச் செயல்திறனைப் பற்றி சரியாகப் பரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தி வரும் யிவூவின் வளர்ச்சி அனுபவத்தை மேலும் சிறப்பாகத் தொகுத்து பயன்படுத்துவதோடு, தத்தமது பணித் துறைகளின் நடைமுறைக்கேற்ப உயர் தர வளர்ச்சியை பெற பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போது யிவூ சந்தையில் 12.6 இலட்சம் கடைகள் உள்ளன. இவை உலகளவில் 230க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் வணிகம் செய்கின்றன.

You May Also Like

More From Author