கினியா-பிசாவ் அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி
கினியா-பிசாவ் அரசுத் தலைவர் உமாரோ எல் மொக்தார் சிசோகோ எம்பாலோ அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டபோது, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கினியா-பிசாவ், சீனாவுடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. அரசியல், தூதாண்மை உறவு உள்ளிட்ட பல துறைகளில் இரு தரப்பும் பல உடன்படிக்கைகளை எட்டியுள்ளன. சர்வதேச மேடையில், இரு தரப்புகளுக்கும் ஒத்த நிலைப்பாடு உண்டு. இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு உறவை இது வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, சீனாவின் உயர்வேக வளர்ச்சி, உலகத்தின் முன்மாதிரியாகும். சீனா, ஆப்பிரிக்காவின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாறியுள்ளது. சீனாவின் வளர்ச்சியிலிருந்து கினியா-பிசாவ் அதிகமான மதிப்புள்ள அனுபவங்களைப் பெற்றுள்ளது. சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளாவிடில், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் இந்த அளவுக்கு உயர்வேக வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.