கிரிக்கெட் மைதானத்தை விட்டு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 13 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் வருமானம் ஈட்டுவதில் அவரே அசைக்க முடியாத ‘கிங்’ ஆக விளங்குகிறார்.
தற்போது விளையாடி வரும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களை விட, சச்சினின் நிகர சொத்து மதிப்பு அதிகம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026-ம் ஆண்டு நிலவரப்படி, சச்சினின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,470 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. விளம்பரங்களில் நடிக்கவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சச்சின் ஒரு நாளைக்கு 7 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை கட்டணமாகப் பெறுகிறார்.
பிஎம்டபிள்யூ (BMW), அபோலோ டயர்ஸ் முதல் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை பலவற்றுக்குத் தூதராக இருக்கும் சச்சின், பங்குகளிலும் ரியல் எஸ்டேட்டிலும் செய்துள்ள புத்திசாலித்தனமான முதலீடுகள் அவரது வருமானத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி வருகின்றன.
மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது பங்களாவின் மதிப்பு மட்டுமே 150 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
