இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

Estimated read time 1 min read

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் டாட் மெக்கிளே மற்றும் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்துவகையான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படும் எனவும் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி, பழங்கள் உள்ளிட்ட 895 சதவீத பொருட்களுக்கும் இந்தியாவில் வரி குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது எனவும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் நியூசிலாந்து விசா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அந்திய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author