சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரதிநிதியும், துணை அமைச்சருமான வாங் ஷெவ்வென், அமெரிக்க வணிகத் துணை அமைச்சர் மரிசா லாகோ அம்மையார் ஆகியோர், செப்டம்பர் 7ஆம் நாள் தியான்ஜின் நகரில், சீன-அமெரிக்க வணிக மற்றும் வர்த்தகப் பணிக்குழுவின் 2வது துணை அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.
சான் பிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துகளின் நடைமுறையாக்கம், தத்தமது தரப்பு அக்கறை கொண்ட பிரச்சினைகள், இரு நாட்டு வணிக மற்றும் வர்த்தக துறையினர் முன்வைத்த பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறித்து இரு தரப்பினரும் பயன்தரும் முறையில் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.
வாங் ஷெவ்வென் கூறுகையில், சீனா, சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பன்முகங்களிலும் ஆழமாக்கி, திறப்பை விரிவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியை நனவாக்கும். பெரும் மக்கள் தொகை கொண்ட சீனா, அமெரிக்காவுக்கு வாய்ப்பாக உள்ளது.
அச்சுறுத்தலாக அமையாது என்றார்.
மேலும், அமெரிக்காவுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, தொடர்பை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, இரு நாட்டு வணிக மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு சீரான சூழ்நிலையை உருவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜி20 நாடுகள், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட அமைப்புமுறைகளின் கீழ் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.