கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நானாவது நாளில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக,சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 6 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் எடுத்தார்.
இதில் 35வது ரன்னை எடுத்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் இந்த மைல்கல்லை வெறும் 594 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.
இதன் மூலம், 27,000 ரன்களை 623 இன்னிங்ஸ்களில் எட்டிய சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி, குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை ஏற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.