ஜில்லுனு ஒரு செய்தி : மே 1, 2ல் கனமழைக்கு வாய்ப்பு..!

Estimated read time 0 min read

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 30ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மே 1,2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You May Also Like

More From Author