குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

Estimated read time 0 min read

குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய பாஜக, மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

தொடக்கம் முதலே மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது. இதனையடுத்து, மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 158 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

அதேபோல், 84 நகராட்சிகளில் உள்ள இரண்டாயித்து 30 இடங்களில் ஆயிரத்து 791 இடங்களிலும், 34 மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரத்து 90 இடங்களில் 568 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 260 தாலுகா பஞ்சாயத்துகளில் உள்ள ஐந்தாயிரத்து 234 இடங்களில் இரண்டாயிரத்து 397 இடங்களையும் பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author