தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது..!!

Estimated read time 0 min read

உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக பார்ப்பது தங்கத்தை மட்டும் தான். அதனாலேயே உலக சந்தையில் தங்கத்தின் மவுசு எப்போதும் குறைவதில்லை. ஈரான் போருக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், போர் தொடங்கியது முதலாக சரசரவென குறையத் தொடங்கியது.

தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்திருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு எந்த முதலீட்டின் மீதும் தற்போது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தங்கம் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.29) சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது

நேற்று (ஏப்.,28) ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,11,600க்கு விற்பனையாகிறது. அதேபோல், இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்கப்படுகிறது.

You May Also Like

More From Author