சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் பங்கேற்பு
9ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி மற்றும் ஹொங்சியாவ் சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டம் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், அரசவைத் துணைத் தலைமை அமைச்சருமான டின் சியேசியாங் இதில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து இறக்குமதிப் பொருட்காட்சியை மேலும் நன்றாக நடத்தி, சர்வதேசக் கொள்வனவு, முதலீட்டு முன்னேற்றம், பண்பாட்டுப் பரிமாற்றம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய 4 பெரிய மேடைகளின் பங்களிப்பை முழுமையாக வெளிக்கொணர்ந்து உலகின் பல்வேறு நாட்டு மக்களுக்கு மேலும் நன்றாக பலன் அளிக்கச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், காபொன் நாட்டு அரசுத் தலைவர், ஆஸ்திரிய தலைமை அமைச்சர், ஐ.நாவின் வளர்ச்சி மற்றும் திட்ட அலுவலகத்தின் தலைவர் ஆகியோரும் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
ஷாங்காயில் இருந்த போது, லைபீரியத் துணை அரசுத் தலைவர், ஜார்ஜிய துணைத் தலைமை அமைச்சர், கியூபா துணை தலைமை அமைச்சர் உள்ளிட்டோருடன் டின் சியேசியாங்கை முறையே சந்தித்துரையாடினர்.
