தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் இன்று முதல் வி பி ஜிராம் ஜி திட்டம் அமலுக்கு வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, ‘ வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த, புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்காக இந்தியா முழுவதும் 95 ஆயிரத்து 692 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,

தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 957.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலையில், அதனை செயல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

You May Also Like

More From Author