மூளைக் கட்டிகளை துல்லியமாகக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்  

Estimated read time 1 min read

மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக (University of Manchester) விஞ்ஞானிகள், டென்மார்க் நாட்டு ஆய்வுக் குழுக்களுடன் இணைந்து இந்த ரத்தப் பரிசோதனையை முறையை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சோதனை ரத்தத்தில் உள்ள F9 (Coagulation factor IX) மற்றும் COMP (Cartilage oligomeric matrix protein) ஆகிய இரண்டு குறிப்பிட்ட புரதங்களை அடையாளம் காண்பதன் மூலம் மூளைக் கட்டிகளைக் கண்டறிகிறது.

இது 90%-க்கும் அதிகமான துல்லியத்துடன் மூளைக் கட்டிகளைக் கண்டறிவது மட்டுமல்லாமல், சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author