சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி வினாத்தாளை நம்பி ஏமாற வேண்டாம்MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை.
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நுழைவு தேர்வுகளில் ஒன்றான இளங்கலை நீட் 2026 தேர்வு வருகிற மே 03-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இத்தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், தேர்வர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் NTA ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டதாகவும், அனைத்து ரகசிய தேர்வு பொருட்களும் பாதுகாப்பாக உரிய இடங்களை சென்றடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியது.
டெலிகிராம் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் போலி செய்திகள் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவும் தேசிய தேர்வு முகமை மாணவர்களை எச்சரித்துள்ளது.
வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இதுபோன்ற போலி தகவல்களை இணைய குற்றப் பிரிவு அதிகாரிகளிடமோ அல்லது நேரடியாக NTA-விடமோ புகாரளிக்குமாறு தேர்வு முகமை மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நீட் 2026 தேர்வுக்கான அனுமதி அட்டைகள், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கடைசி நேரச் சிக்கல்களை தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி அட்டைகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Here’s something important for every aspirant to know:
NTA has ensured that all question papers and confidential materials have safely reached the last destination with the highest level of security. There is no possibility of paper leaks or early access.
Any claims circulating…
— National Testing Agency (@NTA_Exams) April 29, 2026
