ஐ.நாவுக்கான சீன நிரந்தர துணைப் பிரதிநிதி கேங்ஷுவாங் 21ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையின் ஹைதி பிரச்சினை பற்றிய வெளிப்படைக் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்கா ஹைதியின் மீது 10 விழுக்காடு கூடுதல் அடிப்படை வரி விதித்துள்ளது. அமெரிக்கா ஒரு தரப்பு வாதம், பாதுகாப்புவாதம் மற்றும் பொருளாதார ஆதிக்கம் செய்து, மக்கள் வறுமையால் அல்லப்படுகின்ற ஹைதியை கூட விட்டு வைக்கவில்லை. ஹைதி, சுதந்திரமாக அறிவித்த லத்தீன் அமெரிக்க நாடாக இருந்த போதிலும், நீண்டகாலமாக ராணுவ அடக்குமுறை, வெளிப்புற தலையீடு மற்றும் பொருளாதார சுரண்டல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது என்று கேங்ஷுவாங் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஹைதியின் அமைப்பு முறை மற்றும் திறன் கட்டுமானத்தை வலுப்படுத்தவும், சுதந்திரமாக தற்சார்பு பாதையில் வலிமையுடன் நடைபோடவும் சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டும். இப்போக்கில், சீனா பல்வேறு தரப்புகளுடன் ஆக்கப்பூர்வ பங்கு ஆற்ற விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.