ஏப்ரலில் சீன உற்பத்தி துறையின் பிஎம்ஐ 50.3 சதவீதம்

Estimated read time 0 min read

சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை ஏப்ரல் 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரலில் சீன உற்பத்தி துறையில் பிஎம்ஐ எனும் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு 50.3 சதவீதமாக இருந்தது. இத்துறையில் வளர்ச்சி ஆற்றல் பொதுவாக நிலையாக காணப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தி குறியீடு 51.5 சதவீதமாகவும் புதிய முன்பதிவு குறியீடு 50.6 சதவீதமாகவும் தொடர்ந்து மாறுநிலைப்புள்ளிக்கு உயர்ந்த நிலையிலேயே இருந்தன. உற்பத்தி துறையிலான நிறுவனங்களின் உற்பத்தியும் சந்தை தேவையும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. உற்பத்தி மற்றும் தேவை விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனங்களின் கொள்முதல் விருப்பம் மேலும் வலுவடைந்த நிலையில், கொள்முதல் அளவு குறியீடு 51.1 சதவீதத்தை அடைந்து, முந்தைய மாதத்தை விட 0.2 சதவீத புள்ளி அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author