இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் டிரம்ப் அரசு  

Estimated read time 1 min read

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் சிறப்பு 301 அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை(IPR) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்தியாவை மீண்டும் தனது ‘முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் தொடர்ந்து நீடிப்பதாக அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவுடன் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விவகாரங்களை இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் TPF மூலமாகத் தொடர்ந்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் அழுத்தங்கள், குறிப்பாக இந்தியாவின் மருந்து தயாரிப்புத் துறை மற்றும் மென்பொருள் துறைகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

You May Also Like

More From Author