ஷிஹெசி நகரில் சீனாவின் சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படைப்பிரிவின் சின்ஜியாங் ஒர் அற்புதமான இடம் என்ற நடவடிக்கை ஜூலை 30ஆம் நாள் துவங்கியது.
கலாச்சாரம் மூலம் சின்ஜியாங்கை வளப்படுத்துதல் மற்றும் பொருள் சாரா மரபு செல்வங்களின் மூலம் அதற்கு ஆழகை அதிகரிப்பது என்பது இந்நடவடிக்கையின் தலைப்பாகும். சீனாவின் 31 மாநிலங்கள் மற்றும் சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த 651 முக்கிய பொருள் சாரா மரபு செல்வங்களும், 549 பொருள் சாரா மரபுக் கலைஞர்களும் இதில் பங்கேற்றனர்.
சீனாவின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசு, சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படைப்பிரிவு ஆகியவை இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின.
