வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, தனக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசு பதக்கத்தை அதிபர் டிரம்ப்பிடம் மச்சாடோ வழங்கியுள்ளார்.
வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக டிரம்ப் காட்டி வரும் தனித்துவமான அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இந்த பதக்கத்தை அவருக்கு வழங்கியதாக மச்சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட அதிபர் ட்ரம்ப், மச்சாடோவை ஒரு “அற்புதமான பெண்மணி” என்று பாராட்டியதுடன், அவர் வழங்கிய கௌரவத்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை திருப்பி கொடுத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
