ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரையைப் பாராட்டிய சர்வதேச பிரமுகர்கள்

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி “மக்களே முதன்மை” என்ற கருத்தில் ஊன்றி நிற்பதை வெளிப்படுத்துவதாக சர்வதேசப் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரசிங்கே கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் சீன மக்களுக்குத் தலைமை தாங்கி, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி வருகிறார். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச அமைப்புமுறையின் மேம்பாட்டை இது முழுமையாக நிரூபித்துள்ளது என்றார். மேலும், “நவீனமயமாக்கம்=மேற்கத்தியமயமாக்கம்” என்ற தவறான கருத்து, சீன நவீனமயமாக்கத்தின் மூலம் பன்முகங்களிலும் மறுக்கப்ப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நாவின் முன்னாள் துணைத் தலைமைச் செயலாளர் பினோ அர்லாச்சி கூறுகையில், பொது மக்களுக்காக ஆட்சி புரிவது, ஏற்பாட்டுத் திறன், சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காப்பது ஆகிய துறைகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் மேம்பாட்டைக் காட்டுகிறது. சீனாவின் கருத்து, வேறு நாடுகள் கற்றுக்கொள்ளத் தக்கது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author