உலகப் பொருளாதார மன்றத் தலைமை இயக்குநரின் சிறப்புப் பேட்டி

Estimated read time 0 min read

உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில் நடைபெற்றது. இம்மன்றத்தின் தலைமை இயக்குநர் பிரேன்ட் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். பேச்சுவார்த்தையின் எழுச்சி என்பதே இந்த ஆண்டுக் கூட்டத்தின் தலைப்பு ஆகும்.

மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கூட்டு வெற்றி என்ற சிந்தனையுடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பதிலும் உலகின் ஒத்துழைப்பை முன்னேற்றுவதிலும் சீனாவின் தலைமைப் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்ட அவர், 2017ஆம் ஆண்டின் தாவோஸில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய உரை ஊக்கமிக்கதாக இருந்தது என்றார். மனத்தை ஒருமித்து கூட்டாக முன்னோக்கி சென்றால், மேலும் பெரிய இலக்கை நனவாக்க முடியும் என்பதை சீனா எப்போதும் வற்புறுத்தியுள்ளது. உலக தொழில்நுட்ப புத்தாக்கம் வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்கி, பல தொழில்நுட்ப துறைகளில் சீனா உலகின் முன்னணி நிலையில் இடம் பெற்றுள்ளதாகவும் பிரேன்ட் தெரிவித்தார். 

You May Also Like

More From Author