தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் மூன்று நாட்கள் கொண்டாடப்படும்.
இந்நிலையில் இவ்வாண்டு விழா வெகு விமரிசையாக தொடங்கியது. முதலாவதாக காலை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முல்லை பெரியாற்றில் இருந்து சுமார் 22 அடி நீளமுள்ள அலகு குத்தியும், பால் குடங்கள், ஆயிரம் கண் பானைகள், காவடிகள் எடுத்தும் மேள, தாளங்கள் முழங்க முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும் தெருக்களில் ஆங்காங்கே பல்வேறு தன்னார்வலர்கள் சார்பாக பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.