ஈரான் நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மே 26ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, ஈரானின் நிலைமை குறித்து  அவர் கூறுகையில்,

தற்போதைய மோதலை நிறுத்துவதற்கு சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பிராந்திய நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு, உரிமை பிரதேசம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். பொது மக்களும் இராணுவமற்ற இலக்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும். கடல் வழிப் போக்குவரத்து சுதந்திரப் பாதுகாப்பும் எரியாற்றல் அடிப்படை வசதிகளும் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். அணு ஆயுத பரவல் தடுப்புக்கான விதிகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று சீனா கருத்துவதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author